☰ MENU

About Us

About TNHDC - எங்களைப் பற்றி

தமிழ் நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (TNHDC) 1973 ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்டது. "பூம்புகார்" , நிறுவனத்தின் பெயர் தமிழ் நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம். எங்கள் நிறுவனத் தயாரிப்புகள் நேர்த்தியாகவும், அழகாகவும் சாதாரண விலையில் கிடைக்ககூடியதாகவும் உள்ளது. கைத்திறப் பொருட்கள் கவனமாக கையால் வடிவமைக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்காக சந்தைப்படுத்தப்படுகின்றது. எங்களிடம் வெண்கலம், பித்தளை, செம்பு ஆகியவற்றை கொண்டு செய்யப்பட்ட பல்வேறு வடிவங்களினாலான பஞ்சலோகசிலைகள் உள்ளன. மேலும் தஞ்சை ஓவியங்கள், தஞ்சாவூர் கலை தட்டுப் பொருட்கள், வெள்ளை உலோகத்தினாலான பொருட்கள், கருப்பு உலோகத்தினாலான பொருட்கள், மர சிற்பங்கள், கற்சிற்பங்கள், மர வேலைப்படுகள், கல் வேலைப்படுகள், தோல், சணல் மற்றும் களிமண்ணால் ஆன பொருட்கள், சுவாமிமலை பஞ்சலோகசிலைகள், கொண்டப்பள்ளி பொம்மைகள், மீனாகரி, கலம்கரி, சந்தனமாலைகள், போன்றவை உள்ளன.

Vision - பார்வை

தமிழக கைவினைஞர்களின் திறமை மற்றும் கடுமையான உழைப்பினால் உருவாக்கப்பட்டட பித்தளை, பஞ்சலோகம், மரம், கல் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட தனித்தன்மை வாய்ந்த கைவினைப்பொருட்களை சந்தையில் நுகர்வோருக்கும் மற்றும் கலை ஆர்வலர்களுக்கும் வெளிப்படுத்துவதை குறிக்கோளாக கொண்டு தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.இக்கழகத்தின் முக்கிய நேக்கங்கள்பின்வருமாறு:-

மேற்கொண்ட பணி

  • தமிழ்நாடு கைவினைஞர்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.
  • கைவினைஞர்களின் திறமையை மேம்படுத்த உரிய பயிற்சிகள் அளித்தல்.
  • கைவினைஞர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல்
  • உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களின் தரத்தை உயர்த்துதல்.
  • கைவினைப் பொருட்கள் உற்பத்தியில் ஏற்படும் பணிப்பளுவை குறைத்தல்.
  • கைத்திறத் தொழிலில் நேரிடும் இடர்பாடுகளைக் குறைத்தல் /நீக்குதல்
  • வடிவமைப்புகளில் புதுமையை ஊக்குவித்தல்
  • கைவினைஞர்களுக்கு சமூக-பொருளாதார பாதுகாப்பு அளித்தல்
  • மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களின் விவரங்களை ஆவணமாக்குதல் மற்றும் பதிவு செய்தல்
  • கைவினைஞர்களுக்கு சந்தை வாய்ப்பினைஏற்படுத்துதல்.
  • கைத்திறத் தொழிலில் கைவினைஞர்களின் கலைப்படைப்பு மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரித்தல்.