☰ MENU
மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 13.04.2022 3 கோடியே 94 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 7 பொது பயன்பாட்டு மையங்களை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு தா.மோ.அன்பரசன், தலைமை செயலாளர் முனைவர் திரு.வெ.இறையன்புஇ.ஆ.ப., கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலளர் திரு.தர்மேந்திர பிரதாப் யாதவ்,இ.ஆ.ப., தமிழ் நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி வி.ஷோபனா,இ.ஆ.ப,. மற்றும் அரசு உயர் அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.
26.06.2022 அன்று அரசு முதன்மைச் செயலர் (கை.கை.து (ம) கதர்த்துறை) உடன் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனர், சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் பிற அதிகாரிகளுடன் தம்மம்பட்டியிலுள்ள பொது வசதி மையம் மற்றும் “தம்மம்பட்டி மரசிற்ப கைவினை கிராமம்” அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்து மரசிற்ப கைவினைஞர்களுடன் கலந்துரையாடினார்.
கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் கலாச்சார நிகழ்ச்சியை கைத்தறி மற்றும் துணிநூல், கதர் மற்றும் கிராமதொழில் வாரிய முதன்மை செயலாளர் துவக்கி வைத்தார்
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் விற்பனையகத்தில் கொலு பொம்மை கண்காட்சி 20.09.2021 ஊரக தொழில் துறை அமைச்சர் திரு.தா. மோ. அன்பரசன், கண்காட்சியை துவக்கி வைத்தார்.
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் விற்பனையகத்தில் கொலு பொம்மை கண்காட்சி 20.09.2021 ஊரக தொழில் துறை அமைச்சர் திரு.தா. மோ. அன்பரசன், கண்காட்சியை துவக்கி வைத்தார்.
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் விற்பனையகத்தில் கொலு பொம்மை கண்காட்சி 20.09.2021 ஊரக தொழில் துறை அமைச்சர் திரு.தா. மோ. அன்பரசன், கண்காட்சியை துவக்கி வைத்தார்.
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் விற்பனையகத்தில் கொலு பொம்மை கண்காட்சி 20.09.2021 ஊரக தொழில் துறை அமைச்சர் திரு.தா. மோ. அன்பரசன், கண்காட்சியை துவக்கி வைத்தார்.
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் விற்பனையகத்தில் கொலு பொம்மை கண்காட்சி 20.09.2021 ஊரக தொழில் துறை அமைச்சர் திரு.தா. மோ. அன்பரசன், கண்காட்சியை துவக்கி வைத்தார்.

செய்திகள் & நிகழ்வுகள்

பூம்புகார் இணையதள அங்காடி

கைவினைப் பொருட்களை ஆன்லைனில் வாங்கவும் @ 10% discount

முப்பரிமாண வடிவமைப்பு

3D பிரிண்டரைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட வடிவமைப்புகள்

கைவினைஞர் களஞ்சியம்

தமிழ்நாட்டிலிருந்து எங்கள் கைவினைஞர்களை சந்திக்கவும்

பூம்புகார் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!

தமிழ் நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (TNHDC) 1973 ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்டது. "பூம்புகார்" , நிறுவனத்தின் பெயர் தமிழ் நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம். எங்கள் நிறுவனத் தயாரிப்புகள் நேர்த்தியாகவும், அழகாகவும் சாதாரண விலையில் கிடைக்ககூடியதாகவும் உள்ளது. கைத்திறப் பொருட்கள் கவனமாக கையால் வடிவமைக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்காக சந்தைப்படுத்தப்படுகின்றது. எங்களிடம் வெண்கலம், பித்தளை, செம்பு ஆகியவற்றை கொண்டு செய்யப்பட்ட பல்வேறு வடிவங்களினாலான பஞ்சலோகசிலைகள் உள்ளன. மேலும் தஞ்சை ஓவியங்கள், தஞ்சாவூர் கலை தட்டுப் பொருட்கள், வெள்ளை உலோகத்தினாலான பொருட்கள், கருப்பு உலோகத்தினாலான பொருட்கள், மர சிற்பங்கள், கற்சிற்பங்கள், மர வேலைப்படுகள், கல் வேலைப்படுகள், தோல், சணல் மற்றும் களிமண்ணால் ஆன பொருட்கள், சுவாமிமலை பஞ்சலோகசிலைகள், கொண்டப்பள்ளி பொம்மைகள், மீனாகரி, கலம்கரி, சந்தனமாலைகள், போன்றவை உள்ளன.

பூம்புகார் நிறுவனம், சென்னை, சென்னை விமான நிலையம், வண்டலூர் உயிரியல் பூங்கா, ஐஐடி சென்னை, எழும்பூர் அருங்காட்சியகம், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சுவாமிமலை , புது டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகியவற்றில் அமைந்துள்ள 17 விற்பனை நிலையங்கள் மூலம் கைவினைஞர்களின் பொருட்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. பூம்புகாரின் 7 உற்பத்தி மையங்களான மாமல்லபுரம் (கற்சிற்ப உற்பத்தி நிலையம்), நாச்சியார்கோயில் (பித்தளை மற்றும் வெண்கலப் பொருட்கள் உற்பத்தி நிலையம்), மதுரை (பித்தளை விளக்குகள் மற்றும் பித்தளை கலை பொருட்கள் உற்பத்தி நிலையம்), வாகைக்குளம் (வெண்கல பொருட்கள் உற்பத்தி நிலையம்), சுவாமிமலை (உலோகசிற்ப உற்பத்தி நிலையம்), தஞ்சாவூர் (தஞ்சாவூர் கலை தட்டுகள்), கள்ளக்குறிச்சி (மரவேலைப்பாடுகள்).

மின் தொகுப்பு களஞ்சியத்தின் மூலம் 19052 கைவினைஞர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் அவர்களுக்குத் தேவைப்படும் கைவினைப் பொருட்களின் வகைகள் வாரியாகவும், கைவினைஞர்களின் வேலைப்பாடுகளையும் இவ்வலைத்தளம் மூலம் காண இயலும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள், கைவினைஞர்கள் பற்றிய தகவல்களை உடனடியாக கணினி மூலம் பெறவும் கைவினைப் பொருட்களை வாங்கவும் முடியும். முப்பரிமாண வடிவமைப்பு மற்றும் அச்சுத் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நெகிழி அச்சு மூலம் புதிய வடிவமைப்புகள் முப்பரிமாண மென்பொருட்கள் தயார் செய்யப்படுகிறது பூம்புகார் படைப்புகளை மெய்நிகர் தொழில் நுட்பம் மூலம் முப்பரிமாண வடிவில் உருவாக்கப்பட்டு முப்பரிமாண அச்சு எந்திரம் மூலம் அச்சடிக்கப்பட்டு, பின் அவை பஞ்சலோக சிற்பங்களாக பூம்புகார் உற்பத்தி நிலையங்களில் தயாரிக்கப்படுகின்றன. அந்த பொருட்களை மெய்நிகர் தோற்ற முப்பரிமாண பிம்பங்களாக வடிவமைப்புக்குழு தயாரித்து, அதனை மெய்நிகர் தோற்ற இணையகத்தில் நிறுவப்படுவதன் மூலம் வாடிக்கையாளர்கள்அந்த முப்பரிமாண பொருட்களை தங்களது மெய் நிகர் தோற்ற கரங்களால்தேர்ந்தெடுக்கலாம். கைவினைப் பொருட்களை முப்பரிமாணத்தில் காட்சிப்படுத்தி, மெய்நிகர் தோற்ற செயலியின் மூலம் அலுவலகம், வீடு மற்றும் தேவைப்பட்ட இடங்களில் அலங்கரித்துக் காட்டி கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கைவினைப்பொருட்கள்

சேவைகள்

சந்தைப்படுத்துதல்

விற்பனை நிலையங்கள், இணைய வழி மற்றும் கண்காட்சி நடத்துவதன் மூலமாகவும் சந்தைப்படுத்தப்படுகிறது.

மேலும் படிக்கவும்

சிறப்புத்திட்டங்கள்

இந்து இறநிலையத்துறை, காவல் துறை மற்றும் அரசின் பிற துறைகளுக்கு தங்கப்பதக்கங்கள் வழங்குதல்

மேலும் படிக்கவும்

உட்புற வடிவமைப்பு

உட்புற வடிவமைப்பு உட்புற வடிவமைப்பு மற்றும் அழகுப்படுத்துதலுக்கு எங்களிடம் உள்ள நிபுணர்களின் குழு மிகச்சிறந்த முறையில் வடிவமைத்து தருகிறது.

மேலும் படிக்கவும்

உற்பத்தி

சுவாமிமலை வெண்கல பொருட்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், கோவில் செதுக்கல்கள் போன்ற கைவினைப் பொருட்களை தயாரித்தல்

மேலும் படிக்கவும்

பரிசு

பெரிய நிறுவன விருப்பத்தின் பேரில் வழங்கப்படும் பரிசுப் பொருட்கள் உயர்ந்த தரத்துடனும் மற்றும் கையால்செய்த பொருட்களை வழங்குகிறோம்.

மேலும் படிக்கவும்

பயிற்சிகள்

அடுத்த தலைமுறை கைவினைஞர்களுக்கான பயிற்சி, பெண்களுக்கான பயிற்சி

மேலும் படிக்கவும்

எங்கள் நிர்வாக குழு

Honble Chief Minister

திரு. மு.க.ஸ்டாலின்

மாண்புமிகு முதலமைச்சர்

மாண்புமிகு தமிழக முதல்வர்

திரு. மு.க.ஸ்டாலின்

மாண்புமிகு தமிழக முதல்வர்
Minister for Rural Industries

திரு.தா.மோ. அன்பரசன்

ஊரக தொழில் துறை அமைச்சர்

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்.

திரு.தா.மோ. அன்பரசன்

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர்
  Principal Secretary to Handlooms, Handicrafts, Textiles and Khadi Department

திரு. தர்மேந்திர பிரதாப் யாதவ் இ.ஆ.ப

அரசு முதன்மை செயலாளர்

அரசு முதன்மை செயலாளர்
கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை

திரு. தர்மேந்திர பிரதாப் யாதவ் இ.ஆ.ப

திரு. தர்மேந்திர பிரதாப் யாதவ் இ.ஆ.ப - கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை
 Managing Director - TNHDC

திருமதி. ஷோபனா , இ.ஆ.ப

நிர்வாக இயக்குனர் - TNHDC

நிர்வாக இயக்குனர் - TNHDC

திருமதி. ஷோபனா , இ.ஆ.ப

நிர்வாக இயக்குனர் - TNHDC

எங்களைப் பற்றி மேலும்

தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்களுக்கான ஒரே எம்போரியம் பூம்புகார். நம்பமுடியாத இந்திய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலைத் துண்டுகள் இந்தியாவிற்கு வருகை தரும் ஒவ்வொரு வெளிநாட்டுப் பிரமுகருக்கும் ஒரு ஈர்ப்பாகும்


புகைப்பட தொகுப்பு

எங்கள் புகைப்பட சேகரிப்பில் மூழ்கி, தனித்துவமான இந்திய கலாச்சார மகிமைக்கு சுற்றுலா செல்லுங்கள். மேலும்

வீடியோ தொகுப்பு

எங்கள் வீடியோக்களை விரைவாகப் பாருங்கள்.மேலும்


செய்திகள் & நிகழ்வுகள்

செய்திகள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய கூடுதல் தகவலைப் பெறுங்கள். மேலும்

ஒப்பந்தம்

TNHDC டெண்டர்கள் பற்றிய சிறந்த தகவலைப் பெறுங்கள். மேலும்

மேலும்

எங்கள் நிர்வாக இயக்குனரிடமிருந்து

திருமதி. ஷோபனா , இ.ஆ.ப

Schemes & Welfares / நலத்திட்டங்கள்

ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த கைவினைப் பொருட்கள் மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.10.19 கோடியினை பூம்புகாருக்கு அனுமதித்துள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.3.24 கோடி இணை மானியமாக தமிழக அரசு வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் கைவினைஞர்களுக்கு சிறந்த பணிச்சூழல், திறன் மேம்பாடு, சந்தை வசதி, புதிய வடிவமைப்புக்களை அறிமுகப்படுத்துதல் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். ஒருங்கிணைந்த கைவினைப் பொருட்கள் மேம்பாடு மற்றும் வளர்ச்சி- திட்ட முன்னேற்றம் வ. எண் ஒப்பளிப்பு செய்யப்பட்ட திட்டம் ஒப்பளிப்பு செய்யப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை செலவினத் தொகை (ரூ. கோடியில்) 1. பொது வசதி மையம் 11 5.40 2. கண்காட்சி 22 3.13 3. கிராப்ட் பஜார் 12 4. வடிவமைப்பு கருத்தரங்கு 27 1.23 5. ஒருங்கிணைந்த பயிற்சி 5 0.68 6. உபகரணப் பொருட்கள் 6,212 2.69 7. உற்பத்தியாளர்/ நுகர்வோர் கூட்டம் 1 0.11 மொத்தம் 13.24 மேற்கண்ட திட்டங்களின் மூலம் பயனடைய விரும்பும் கைவினைஞர்கள் இணைப்பு 1, 2 மற்றும் 3 இல் குறிப்பிட்டுள்ள அலுவலர்களை அணுகலாம்.

கன்னியாகுமரி நகர்ப்புற கண்காட்சித்திடல்: பூம்புகார், கன்னியாகுமரியில் ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் ஒரு நகர்புறக் கண்காட்சித் திடல் அமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சித்திடல் 50 கடைகள், உணவுக்கூடம், ஓய்வரை, காட்சி அரங்கம், குதுந்தைகள் பூங்கா மற்றும் வாகனம் நிறுத்தும் இடம் ஆகிய வசதிகளைக் கொண்டுள்ளது. இந்நகர்புற கண்காட்சித்திடல் மூலம் மாதந்தோறும் சராசரியாக 50 கைவினைஞர்கள் பன்பெறுகின்றனர்.

மாமல்லபுரம் நகர்ப்புற கண்காட்சித்திடல் மேலும் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் ரூ.4.24 கோடி செலவில் மற்றுமொரு நகர்ப்புறக் கண்காட்சித்திடல் கட்டப்பட்டுள்ளது. இக்கண்காட்சி திடலில் உணவுகூடம், ஓய்வரை, காட்சி அரங்கம், குழந்கைகள் பூங்கா, கைவினைஞர்கள் தங்குமிடம் மற்றும் வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ளது.

தமிழக அரசு மாநில புதுமை முயற்சி திட்டத்தின் கீழ் கைவினைஞர்களின் திறமைக்கான மின் தொகுப்பு களஞ்சியம் ஏற்படுத்த ரூ.1.00 கோடி நிதி வழங்கியுள்ளது. இது தமிழக கைவினைஞர்கள் அனைவருக்கும் நிலையான வடிவமைப்புடன் ஒவ்வொரு கைவினைஞருக்கும் தனி மின் பக்கங்களை கொண்ட மேம்படுத்தப்பட்ட, புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட மின் தொகுப்பு ஆகும். இம்மின் தொகுப்பின் மூலம் குறைந்த வருவாய் உடைய கைவினைஞர்கள் உயர்வு அடைவார்கள். தற்போது இந்நிறுவனம் 19,052 கைவினைஞர்களின் விபரங்களை பதிவு செய்துள்ளது. இத்தொகுப்பில் கைவினைஞர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் வாரியாகவும், சாதி மற்றும் பாலின வாரியாகவும் விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இதன் மூலம் கணினியில் இக்கைவினைஞர்களின் விவரங்களைக் கண்டறிய முடியும். இந்த மின் தொகுப்பில் உறுப்பினராக இணைய www.poompuhar.com/artisan இணையதளத்தை தொடர்பு கொள்ளவும். இம்மின் தொகுப்பில் உறுப்பினராக இணைப்பு 2 மற்றும் 3 இல் குறிப்பிட்டுள்ள அலுவலர்களை அணுகலாம்.

பூம்புகார் நிறுவனம், ஒருங்கிணைந்த கைவினைப் பொருட்கள் மேம்பாடு மற்றும் வளர்ச்சி திட்டத்தின் மூலமாக ரூ. 5,000 மதிப்புள்ள இலவச உபகரணங்கள் 10,000 கைவினைஞர்களுக்கு வழங்கி வருகிறது. அபிவிருத்தி ஆணையர், (கைவினைப்பொருட்கள்) புதுடெல்லி அலுவலகம் மூலம் வழங்கப்படும் கைவினைஞர் அடையாளம் அட்டை (Pechaan card) உள்ளவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.

ஒருங்கிணைந்த கைவினைப் பொருட்கள் மேம்பாடு மற்றும் வளர்ச்சி திட்டத்தின் மூலமாக 13 பொது பயன்பாட்டு மையங்கள் ரூ. 780.00 இலட்சங்கள் செலவில் பல்வேறு கைத்திறத்தொழில்களில் அமைக்க உள்ளது. இதில் 6 பொது பயன்பாட்டு மையங்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 08.03.2018 அன்று துவக்கி வைக்கப்பட்டது. இதேபோன்று தமிழக அரசின் நிதி உதவியில் நலிந்த கைத்திறத் தொழில்களான பனை ஒலை, கோரைபாய், களிமண் மற்றும் சுடுகளிமண் ஆகிய கைத்திறத்தொழில்களில் ரூ.188.00 இலட்சங்கள் செலவில் 4 பொது பயன்பாட்டு மையங்கள் அமைக்க உள்ளது. இந்த பொது பயன்பாட்டு மையங்களில் கைவினைஞர்களுக்கு தேவையானா நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. எனவே தேவைப்படும் கைவினைஞர்கள் இலவசமாக பயன்படுத்தி கைவினைப்பொருட்களை எளிதாக உற்பத்தி செய்து பயன் பெறலாம்.

கைத்திறப் பொருட்களை உற்பத்தி செய்யும் திறனை மேம்படுத்திக் கொள்வதற்காக இக்கழகம் 5 மாதம் / 2 மாதம் பயிற்சிகளை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடத்தப்பட்டுள்ளது. இத்தகைய கைத்திறப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான திறமைகளைப் பெற ஆர்வமுள்ளவர்கள் காலமுறைதோறும் இக்கழகம் ஏற்பாடு செய்யும் பயிற்சித் திட்டங்களில் சேரலாம். இதன் மூலம் கைத்திறத் தொழில்களில் திறமைகளை வளர்த்துக்கொண்டு கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்வதை தொழிலாக மேற்கொள்ளலாம். பயிற்சிக் காலங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,500/- உதவித் தொகையாக இந்நிறுவனம் வழங்கியுள்ளது.ஒருங்கிணைந்த கைவினைப் பொருட்கள் மேம்பாடு மற்றும் வளர்ச்சி- திட்ட முன்னேற்றம் வ. எண் ஒப்பளிப்பு செய்யப்பட்ட திட்டம் ஒப்பளிப்பு செய்யப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை செலவினத் தொகை (ரூ. கோடியில்) 1. பொது வசதி மையம் 11 5.40 2. கண்காட்சி 22 3.13 3. கிராப்ட் பஜார் 12 4. வடிவமைப்பு கருத்தரங்கு 27 1.23 5. ஒருங்கிணைந்த பயிற்சி 5 0.68 6. உபகரணப் பொருட்கள் 6,212 2.69 7. உற்பத்தியாளர்/ நுகர்வோர் கூட்டம் 1 0.11 மொத்தம் 13.24 மேற்கண்ட திட்டங்களின் மூலம் பயனடைய விரும்பும் கைவினைஞர்கள் இணைப்பு 1, 2 மற்றும் 3 இல் குறிப்பிட்டுள்ள அலுவலர்களை அணுகலாம்.

3D வடிவமைப்பு மற்றும் அச்சு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒரு வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் ஒன்றினை நிறுவியுள்ளது.

Poompuhar Awards / விருதுகள்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்ட பேரவை விதி 110ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பின்படி 65 வயதுக்கு மேற்பட்ட திறன்மிகு கைவினைஞர்களுக்கு, “வாழும் கைவினைப் பொக்கிஷம்" என்ற விருது 2013-2014 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விருது தலா ரூ.1.00 லட்சம் ரொக்கப்பரிசு, 8 கிராம் தங்க பதக்கம், ஒரு தாமிரப்பத்திரம் மற்றும் சான்றிதழும் கொண்டதாகும். இவ்விருது 10 கைவினைஞர்களுக்கு ரூ.15.00 இலட்சம் செலவில் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கைத்திறன் மேம்பாட்டுக்காக பங்களிப்பு செய்த சிறந்த 10 கைவினைஞர்களை தேர்வு செய்து இந்நிறுவனம் வருடந்தோறும் பூம்புகார் மாநில விருதுகளை வழங்கி வருகிறது. இவ்விருதுகள் ரூ.50,000/- ரொக்க பரிசு, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிர பத்திரம் மற்றும் தகுதிச் சான்றிதழும் கொண்டதாகும். இவ்விருது பெற்ற கைவினைஞர்கள் 60 வயது அடைந்தவுடன் பொருளாதாரத்தில் பின்தங்கியவராக இருக்கும் பட்சத்தில் இந்திய அரசால் வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.3500/- பெற தகுதி உடையவராகிறார்கள்.

2011-2012 ஆம் ஆண்டு முதல் “பூம்புகார் மாவட்ட கைத்திறன் விருது" என்ற புதிய விருது அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விருது ரொக்கப்பரிசு ரூ.10,000/-, ஒரு வெள்ளி பதக்கம் மற்றும் ஒரு சான்றிதழும் கொண்டதாகும். ஒவ்வொரு ஆண்டும் 16 கைத்திறத் தொழில்களிலிருந்து 85 கைவினைஞர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. பெண் கைவினைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், அவர்களுடைய சுய சார்பினை உறுதிப்படுத்தும் வகையிலும் மொத்த விருதில் 17 விருதுகள் பெண் கைவினைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க கைத்திறத் தொழில்கள் நீடித்திருக்கவும் அவற்றை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்கும் இளைஞர்களை இத்துறையில் ஊக்கப்படுத்துதல் அவசியமாகிறது. இதனை செயல்படுத்தும் வகையில் 2013-2014-ஆம் ஆண்டு முதல் 30 வயதிற்குட்பட்ட இளம் கைவினைஞர்களுக்கு இக் “கைத்திறன் போட்டி", அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போட்டியில் 150 கைவினைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.2000/- ரொக்க பரிசு, வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள். இப்போட்டிகள் முக்கிய கைத்திறப் பொருட்களின் மையங்களில் நடத்தப்படும்.

தமிழ்நாடு கைவினைப் பொருட்களை ஏற்றுமதி செய்பவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு “கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி விருது” 2014-2015-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விருது ரூ.2.50 இலட்சம் செலவில் ஒவ்வோர் ஆண்டும் இரு நபர்களுக்கு வழங்கப்படும். இவ்விருது ரூ.40000/- ரொக்கப் பரிசு, 4 கிராம் தங்கப்பதக்கம், ஒரு தாமிரப்பத்திரம் மற்றும் ஒரு சான்றிதழும் கொண்டதாகும்.

கைவினைப் பொருட்கள் கைவினைஞர்களைக் கொண்ட ஒரு குழுவினரால் தயாரிக்கப்படுகிறது. இக்குழுவில் தனிப்பட்ட ஒரு கைவினைஞரை விருதுக்காக இனம் காண்பது கடினமான செயலாகும். எனவே ஒரு குழுவாக பணிபுரிந்து ஒரு பொருளைத் தயாரித்த குழுவினரை கௌரவிக்கும் நோக்கில் “குழு உற்பத்தி விருது” அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் 3 குழுக்களுக்கு ரூ. 3.75 இலட்சம் செலவில் வழங்கப்படுகிறது இவ்விருது ரூ.40000/- ரொக்கப் பரிசு, 4 கிராம் தங்கப்பதக்கம், ஒரு தாமிரப்பத்திரம் மற்றும் ஒரு சான்றிதழும் கொண்டதாகும்.

கைவினைஞர்களால் தயாரிக்கப்படும் பல கலைப்படைப்புகளும் பெரும்பாலும், அலங்காரம் சார்ந்தோ அல்லது மதம் சார்ந்தோ அமைகின்றன. எனவே பயன்பாடு சார்ந்த பொருட்களைத் தயாரிக்க கைவினைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில், “பயன்பாடு சார்ந்த கைவினைப் பொருட்கள் விருது” அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விருது ஆண்டுதோறும் 3 கைவினைஞர்களுக்கு ரூ.3.75 லட்சம் செலவில் வழங்கப்படுகிறது. இவ்விருது ரூ.40000/- ரொக்கப் பரிசு, 4 கிராம் தங்கப்பதக்கம், ஒரு தாமிரப்பத்திரம் மற்றும் ஒரு சான்றிதழும் கொண்டதாகும். மேற்கண்ட எட்டு விருதுகளும் ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட கைவினைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. விருதுகளுக்கான தகவல்களை பெற இணைப்பு-1ல் குறிப்பிடப்பட்ட அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

Crafts Gallery / கைவினைப் பொருட்கள் தொகுப்பு

Awards & Recognition / விருதுகள் & அங்கீகாரம்

National eGovernance 2016 - 17 Silver award - ICT
தேசிய மின் ஆளுமை 2016 - 17 வெள்ளி விருது - ICT
Skoch award - Platinum  - 2017
ஸ்கோச் விருது - பிளாட்டினம் - 2017
 Construction Industry Award  - 2017
கட்டுமானத் தொழில் விருது - 2017
Recognition from Coimbatore International airport
கோவை சர்வதேச விமான நிலையத்தின் அங்கீகாரம்

Testimonials / வாடிக்கையாளர் சான்றுகள்

Our clients / வாடிக்கையாளர்கள்